அந்தக்காலங்களில் தெலுங்கில் மிகப்பெரும் நடிகராக இருந்தவர் கிருஷ்ணா இவரின் மகன் தான் தற்போது ஆந்திர திரையுலகை கலக்கி கொண்டிருக்கும் மகேஷ்பாபு. தெலுங்கு சினிமா உலகில் இவருக்கு மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உண்டு.
இன்று தனது தந்தை கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கீழ்க்கண்ட வாழ்த்து செய்தியை தனது தந்தைக்காக வழங்கியுள்ளார் மகேஷ்பாபு.
இங்கே என் அன்னயாவுக்கு மிகவும் மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள்- எனது கற்றலின் ஒரு பகுதி அவரிடமிருந்து வந்தது என்று எளிதில் சொல்ல முடியும் … ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் ஆகியவை அவர் தன்னலமின்றி என்னிடம் அனுப்பியது உங்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் எப்போதும் மகிழ்ச்சியையும் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
சிறுவயதில் இருந்தே மகேஷ்பாபுவும் படத்தில் நடித்து வருகிறார். தன் தந்தையுடனும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.