ஓய்வை அறிவிக்கும் தோனி? – கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

203

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இன்று மலை தனது ஓய்வை அறிவிக்கவுள்ளார் என தகவல் கசிந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் தொண்டுல்கருக்கு அடுத்து அதிக ரசிகர்களை பெற்றவர் மகேந்திர சிங் தோனி. பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வந்த அவர் ஏற்கனவே ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி விட்டார்.

மேலும், 2019 உலக கோப்பையுடன் அவர் ஓய்வை அறிவிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தோனி கிரிக்கெட்டை விட்டு விலகக் கூடாது என அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர் சந்திப்பிற்கு தோனி ஏற்பாடு செய்துள்ளார். எனவே, அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி தோனியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  விமர்சனத்தில் எல்லை மீறும் தமிழ் டாக்கீஸ் மாறன்