Biggboss promo

பிக்பாஸ் வீட்டில் 2 புதிய விருந்தினர்கள் – வீடியோ பாருங்க…

பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக கடந்த சீசனில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் நடிகை என இருவர் வந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. பினாலே டாஸ்க் மூலம் முகேன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இயக்குனர் சேரன் வெளியேறினார்.

எனவே, கவின், லாஸ்லியா, ஷெரின், தர்ஷன், சாண்டி ஆகிய 5 பேரில் முகேனுடன் மோதப்போகிறார் யார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் மகத் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். ஒரு வாரம் தங்கப்போவதாக மகத் கூறினார். ஆனால், எவ்வளவு நாட்கள் அங்கு இருப்பார்கள் என தெரியவில்லை.இது தொடர்பான புரமோ வீடியோ இன்று காலை வெளியானது.