Latest News
நாளை மஹாளய அமாவாசை- கோவிட் 19 தடையால் எப்படி பித்ரு தர்ப்பணம் செய்யலாம்
முன்னோர்களுக்கு உரிய மரியாதையாக நாம் செய்வது அவர்களுடைய வருடாந்திர திதி. இதை கண்டிப்பாக நாம் செய்யவேண்டும். தற்போதுள்ள கால மாற்றத்திலும் அவசர யுகத்திலும் பலர் இதை செய்வதில்லை.
இப்படி செய்யாமல் இருப்பது தவறு. சிலர் ஏதாவது ஒரு சூழ்நிலையால் இறந்த தாய் தகப்பன் உரிய முன்னோர்களுக்கு உரிய மரியாதையான திதி சடங்கை செய்யாமல் இருப்பார்கள்.
அப்படி வருடாந்திர திதியை செய்யாமல் இருப்போர், முன்னோரை இதுவரை மறந்து விட்டு சிரார்த்த பரிகாரங்களை செய்யாத காரணத்தால் வீட்டில் பல தோஷங்கள் ஏற்படுவதுண்டு.
இப்படி உள்ளவர்களுக்காக வருவதே மஹாளய பட்ச அமாவாசை ஆகும். வருடம் தோறும் புரட்டாசி மாத அமாவாசையன்று பூமிக்கு இறங்கி வந்து நம்மை ஆசிர்வதிப்பதாக ஐதீகம் அந்த அமாவாசையன்று நாம் சிரார்த்த பரிகாரங்களை வேதங்கள் தெரிந்த புரோகிதர்களை வைத்து செய்தால் நலம் பயக்கும். அனைத்து தோஷங்களும் விலகும்.
இந்த வருடம் கொரோனா என்பதால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் செய்ய அரசு தடை விதித்துள்ளது.
அதனால் இராமேஸ்வரம், சேதுக்கரை, தேவிபட்டினம்,சதுரகிரி உள்ளிட்ட தீர்த்த ஸ்தலங்களில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேதத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால் எங்கெல்லாம் நீர் இருக்கிறதோ அங்கெல்லாம் நீராடலாம். வீட்டில் பைப்பில் வரும் தண்ணீரில் குளித்து விட்டுக்கூட உரிய புரோகிதரை வைத்து தர்ப்பண பூஜையை வீட்டில் செய்யலாம். புரோகிதரை அழைக்க முடியவில்லையென்றால் முன்னோர்களை நினைத்து உங்கள் இஷ்ட தெய்வம், குல தெய்வத்தை நினைத்து அவர்களுக்காக சிறிது நேரம் மெளன தியானம் செய்து வேண்டிக்கொள்ளலாம். பசு மாட்டுக்கு அகத்திக்கீரை வாழைப்பழம் கொடுக்கலாம்.
அதனால் அரசு சொல்லிய விதிமுறையை கடை பிடித்து தர்ப்பண பூஜையை மேற்கொள்வோம்.