Published
1 year agoon
சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த மஹா கவி சுப்பிரமணிய பாரதியார்.
இவர் சிறந்த கவி பாடும் ஆற்றல் பெற்றவர். சுதந்திரத்துக்கு ஆதரவாக வெள்ளையருக்கு எதிராக இவர் பாடிய பாடல்கள் புகழ்பெற்றவை.
ஜாதி மத இன நிற பேதங்கள் இவருக்கும் என்றும் பிடித்ததில்லை. இதை எல்லாம் எதிர்த்து கடுமையாக போராடினார்.
சிறந்த பக்தியாளரான இவர் சென்னையில் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வேலை செய்தார் அதில் சுதந்திர தாகமுள்ள பல விசயங்களை எழுதினார்.
தினமும் சென்னையின் பாரிமுனை பகுதியில் உள்ள புகழ்பெற்ற காளிகாம்பாள் கோவிலில் சென்று இவர் வழிபடுவாராம். காளியின் மிக தீவிர பக்தர்.
கடந்த 1882ம் ஆண்டு இதே நாளில் பிறந்த சுப்ரமணிய பாரதி செப்டம்பர் 11 , 1921ம் ஆண்டு குறைந்த வயதிலேயே மறைந்தார்.
பெண்களுக்கு ஆதரவாக இவர் பாடிய பாடல்கள் புகழ்பெற்றவை.ஆணுக்கு சமமாக பெண்களும் நடத்தப்பட வேண்டும் என அன்றே விரும்பினார் பாடல்கள் எழுதினார்.
இவர் பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின் கவிதை வடிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது,
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா! திறம்பாட வந்த மறவன்! அறம்பாட வந்த அறிஞன்! படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று! தமிழுக்குத் தொண்டுசெய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்! என அவர் கூறியுள்ளார்.
தமிழ் முறைப்படி பிறந்த நாள் கொண்டாடுவதால் ஏற்படும் நற்பலன்கள்
என்னுடைய பிறந்த நாளுக்கு ஆடம்பரம் வேண்டாம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் பிறந்த நாள்
இளையதிலகம் பிரபுவின் பிறந்த நாள் இன்று
அதுல்யா ரவியின் பிறந்த நாள் புகைப்படங்கள்
இயக்குனர் நடிகர் மனோபாலாவின் பிறந்த நாள் இன்று