Published
1 year agoon
மஹாசிவராத்திரி கிரிவலம் செல்வோம்!!!
28.2.2022 திங்கள் நள்ளிரவு 2.21 முதல் 1.3.2022செவ்வாய் நள்ளிரவு 12.44 வரையிலும் மஹாசிவராத்திரி இருக்கின்றது;
பஞ்சாங்கப்படி,தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் காலமே தேய்பிறை சிவராத்திரி ஆகும்;
ஈசனின் அருளைப் பெற விரும்புவோரும்,அனைத்து முற்பிறவிகளின் கர்மவினைகளை கரைக்க விரும்புவோரும் ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி நாளிலும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;
கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்றுதான் செல்வத்தின் அதிபதி குபேரன் கிரிவலம் வருகின்றார்;
இதே போல,ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி அன்றும் ஒவ்வொரு தெய்வீக சக்திகள் ஒவ்வொரு ஆன்மீக நோக்கங்களுடனும் அண்ணாமலை கிரிவலம் வருகின்றன;
அறிந்தவரையிலும்,ரமண மகரிஷி அவர்கள் ஒரே ஒரு முறை அண்ணாமலை கிரிவலம் வர 90 நாட்கள் எடுத்துள்ளார் எனும் போது அதற்குரிய ஆன்மீக தாத்பரியம் என்ன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது;
ரமண மகரிஷி அவர்களின் ஆத்மபலத்தை எண்ணி பலமுறை வியந்து,ஸ்தம்பித்து தன்னிலை மறக்க வேண்டி இருக்கின்றது;எப்பேர்ப்பட்ட மஹான் அவர்!!!!!
ஈசனுடன் முழுமையாக தன்னை அர்ப்பணிக்க விரும்புவோர் இந்த வருட மஹாசிவராத்திரி அன்று அண்ணாமலை கிரிவலம் செல்வது அவசியம்;
ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் அண்ணாமலை கிரிவலம் வரலாம்;
அல்லது
ஒரே ஒருமுறை கிரிவலம் நிறைவு செய்துவிட்டு,அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தினுள் சிவராத்திரி பூஜையினுள் கலந்து கொள்ளலாம்;
கிரிவலம் செல்லும் போதும்,அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தினுள் இருக்கும் போதும் உங்களுக்குத் தெரிந்த சிவ மந்திரம் ஒன்றை ஜபித்துக் கொண்டே இருப்பது நன்று;
சிவாய நம
சிவசிவ
ஓம்நமச்சிவாய
சிவயசிவ
நமச்சிவய
என்று உங்களுக்கு தெரிந்த எந்த ஒரு மந்திரத்தையும் ஜபிக்கலாம்;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருனாச்சலாய நமஹ