cinema news
மஹா படம் வெளிவரக்கூடாது- இயக்குனர்
ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள படம் மஹா. இப்படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட அன்றிலிருந்தே பஞ்சாயத்தாகதான் உள்ளது. ஆரம்பத்தில் ஹன்சிகா சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி போஸ்டர்களில் இடம்பெற்றிருந்து சர்ச்சையானது. இந்த படத்தை ஓடிடியில் வெளியிட இப்படத்தின் இயக்குநர் ஜமீல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இப்படத்தில் கருணாகரன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தில் ஹன்சிகாவுடன் சிம்புவும் இணைந்து நடித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பி நிறைவடைந்தது.
கொரோனா காரணமாக திரைப்படங்கள் தியேட்டர்களில் படங்கள் வெளியாகாத நிலையில் மஹா படம் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மஹா படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி அப்படத்தின் இயக்குநர் யூ.ஆர்.ஜமீல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த படத்திற்காக ரூ.24 லட்சம் சம்பளம் பேசிய நிலையில் ரூ.8.15 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. முக்கிய காட்சிகள் எடுக்கப்படாத நிலையில் தனது கதைக் கருவை வேறு நபர்களை வைத்து படமாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மஹா படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.