சிங்கத்தோட பலமா…? நரியோட தந்திரமா? – மாஃபியா டீசர் வீடியோ

154
mafia teaser

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனம் ஈர்த்தவர் கார்த்திக் நரேன். அதன்பின் அவர் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.

அதன்பின் அருண்விஜயை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் மாஃபியா. இப்படத்தில் வில்லனாக பிரசன்னா நடித்துள்ளார். மேலும், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த டீசரை பார்த்துவிட்டு கார்த்திக் நரேனை வரவழைத்து ரஜினி மிகவும் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  எஸ்.பிபிக்கு விரைவில் நினைவு இல்லம்- அவரது மகன் எஸ்.பி.பி சரண்