Latest News
மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் படகு சேவை
மதுரையின் பிரதானமான இடத்தில் உள்ளது வண்டியூர். தென்மாவட்டம் பலவற்றில் இருந்து நுழைபவர்கள் நுழையும் முக்கிய பாதையாகவும் மதுரை வண்டியூர் உள்ளது.
மதுரையின் அடையாளமாக சினிமாக்களில் காண்பிப்பது மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் சார்ந்த பகுதிகள்தான்.
அந்தக்கால மதுரை மரிக்கொழுந்து வாசம் பாடல் தொடங்கி எத்தனையோ பாடல்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.
இந்த மாரியம்மன் கோவிலும் தெப்பக்குளமும் மதுரையின் அடையாளங்களாகி போயின. இந்த தெப்பக்குளம் பெரிய தெப்பக்குளம் என்பதால் இங்கு படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சேவையை இன்று தொடங்கி வைத்தார்.9629439499