Latest News
மதுரை – ராமேஸ்வரம் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்
மதுரை – இராமேஸ்வரம் வழித்தடம், ரயில் பயணிகளுக்கு உள்ள முக்கியமான வழித்தடம். தென்மாவட்டங்களில் மதுரை வரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் போன்றவற்றை சுற்றி பார்க்க வரும் வெளியூர் வெளிநாட்டு பயணிகளும், நேராக ராமேஸ்வரம் வந்து விட்டு பின்பு மதுரையை சுற்றி பார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகளும் இருப்பார்கள்.
இவர்களுக்கு மதுரை ராமேஸ்வரம் ரயில் பயணம் கை கொடுத்தது, இந்த ரயில் தென்மாவட்ட மக்களுக்கும் மிகப்பெரும் பலமாய் பாலமாய் இருந்தது.
இந்த சூழ்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடங்களுக்கு முன் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. மீண்டும் இந்த ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.