Entertainment
மதுரை எம்.பிக்கு விமானத்துறை அமைச்சரின் காட்டமான பதில்
மதுரை எம்பியாக பதவி வகிப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன்.
இவர் அவ்வப்போது அதிரடியாக ஏதாவது பேசி வருவார். மேலும் தொகுதி வளர்ச்சி சம்பந்தமாக அதிக கோரிக்கைகளை வைப்பார்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் ஏனென்றால் கடந்த ஆண்டு தமிழகம் செலுத்திய ஜி.எஸ்.டி வரி 21 மாநிலங்கள் செலுத்திய வரியை விட அதிகம் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்து பேசியுள்ள விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வட மாநிலங்களில் எல்லா இடத்திலும் 1 சர்வதேச விமான நிலையம் தான் உள்ளது அப்படி இருக்கையில் நான்காவதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம் தர முடியாது என்ற அடிப்படையில் அவர் பதிலளித்துள்ளார்.
