Latest News
கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நடந்தோ பஸ்ஸிலோதான் அலுவலகம் வரணும்- மதுரை கலெக்டர் அதிரடி
தலைப்பை பார்த்த உடன் என்னடா இது அராஜகமா இருக்கேன்னு பயந்துடாதிங்க. உலகில் சுற்றுச்சூழல் மாசு பெருகி வருகிறது. பெரும்பாலும் டூவீலர், கார் போன்ற வாகனங்களால் மாசு பெருகி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
இதை போக்க சிறிய முயற்சியாக சில உயரதிகாரிகள் சைக்கிளில் அவ்வப்போது அலுவலகம் வந்து கவனத்தை ஈர்க்கின்றனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
இதில் ஒரு கட்டமாக மதுரை மாவட்ட ஆட்சியராக உள்ள அனீஷ் சேகர் , இனிமேல் புதன் கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அலுவலகம் வரும்போது சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக பஸ்ஸிலோ, அல்லது நடந்தோ, சைக்கிளிலோதான் அலுவலகம் வர வேண்டும் என கூறியுள்ளார்.