பல்வேறு அரசியல்வாதிகள் பல்வேறு நலத்திட்டங்களை சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்கிறார்கள். ஆனால் மதுரையை சேர்ந்த ஒரு வேட்பாளர் தான் போட்டி இடும் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் வாக்குறுதிகளை பாருங்கள்.
மக்கள் அனைவருக்கும் ஆப்பிள் ஐ போன் வழங்கப்படும்.
*அனைவருக்கும் நீச்சல் குளம் வசதியுடன் கூடிய 3 மாடி வீடு கட்டித்தரப்படும்.
*ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடம் ஒரு கோடி ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
*அனைத்து வீடுகளுக்கும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் வழங்கப்படும்.
*ஒவ்வொரு வீட்டிற்கு சிறிய வகை ஹெலிகாப்டர் வழங்கப்படும்.
*இல்லத்தரசிகளுக்கு வேலை செய்ய ரோபோ வழங்கப்படும்.
*பெண்களின் திருமணதிற்கு 100 சவரன் தங்க நகை வழங்கப்படும்.
இதை எல்லாம் பார்த்து மக்கள் வியந்து போய் உள்ளனர்.

