Latest News
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது முடிவுறும்- மத்திய அரசின் பதில்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு நீண்ட காலம் ஆகியும் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை என்பது பொதுவான விமர்சனம் ஆகும்.
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் எப்போதுதான் கட்டி முடிக்கப்படும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. “மதுரை தோப்பூரில் அமைய உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026 அக்டோபர் மாத்தத்திற்குள் நிறைவு பெறும்” என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் இது குறித்து சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா, இதுவரை 22 ஏய்ம்ஸ் மருத்துவமனைகளைப் புதிதாகக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
