மதுரை ஆதினம் பேச்சு- அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

மதுரை ஆதினம் பேச்சு- அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

முந்தைய மதுரை ஆதினத்தை போல் அல்லாது, தமிழக அரசியல் நிலவரங்களையும், அரசு செய்யும் தவறுகளை உடனுக்குடன் தட்டி கேட்டு பேசி வருகிறார் புதிதாக பொறுப்பேற்ற மதுரை ஆதினம்.

தருமபுரம் பல்லக்கு விவகாரத்தில் அரசுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வைத்தார். மேலும் கோவில் சொத்துக்களை சாப்பிடுபவர்கள் அடுத்த பிறவியில் வவ்வால்களாக பிறப்பார்கள் என பேசி இருந்தார்.

மேலும் நடராஜரை ஆபாசமாக பேசிய மைனர் விஜய் என்பவனை கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் கடுமையாக இவர் பேசி வந்தார். சமீபத்தில் தமிழ்நாடு வந்த பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார்.

ஹிந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரில் அரசு கோவில்களை கையகப்படுத்தி நிர்வாகம் செய்வது பல இந்து சமய ஆர்வலர்களுக்கும் மடாதிபதிகளுக்கும் பிடிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் நேற்று நடந்த துறவியர் மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம், ஹிந்து சமய அறநிலையத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இது குறித்து பதிலளித்த ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள, செய்திக்காக மதுரை ஆதீனம் தொடர்ந்து பேசி வருகிறார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். விரைவில் மதுரை ஆதீனமும் தமிழக அரசை ஆதரிக்கும் நிலை வரும் என அமைச்சர் கூறினார்.