Latest News
மதுரை ஆதினம் மீது கைவைத்தால் அப்றம்- ஓப்பனாகவே எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை
மதுரையின் புதிய ஆதினம் பதவி ஏற்றதில் இருந்தே அதிரடியாக செயல்பட்டு வருகிறார். ஹிந்து மதத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு உடனடியாக பதில் கொடுத்து வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட விஜய்யின் படத்தை யாரும் பார்க்காதீர்கள் என துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் ஒரு காட்சியை வைத்து கூறினார்.
மேலும் தமிழக அரசுக்கு எதிராக தொடர் புகார்களை கூறி வருகிறார். ஹிந்து சமய அறநிலையத்துறை சிதம்பரம் கோவில் உள்ளிட்ட கோவில்களை கைப்பற்றுவதையும் மேலும் ஹிந்து சமய அறநிலையத்துறை கைகளில் இருந்து கோவில்கள் மீட்கப்படவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு.
இவர் இப்படி தொடர்ந்து பேசி வருவதால், கோபமடைந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சருக்காகதான் பார்க்கிறோம், மதுரை ஆதினம் இப்படி பேசிக்கொண்டே இருக்க கூடாது என்று மிரட்டும் தொனியில் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு நேற்று திருச்சியில் நடந்த பாரதிய ஜனதா கூட்டத்தில் பேசிய தலைவர் அண்ணாமலை, மதுரை ஆதினம் மீது கைவைத்தால் நாங்க பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். சேகர் பாபு தற்போதுதான் தன் வேலையை காட்டுகிறார். மதுரை ஆதினம் பிரதமரை விமான நிலையத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
சும்மா ஒன்றும் அவர் பேசியிருக்க மாட்டார் என்பதை அமைச்சருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.