Entertainment
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மரணம்
அதிமுக அவைத்தலைவராக நீண்ட நாள் பொறுப்பில் இருந்தவர் மதுசூதனன். இவர் சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் . சில நாட்களுக்கு முன் இவர் இறந்து விட்டார் என்று கூட தகவல் எழுந்தது.
இந்த நிலையில் அதிமுக அவைத்தலைவர்
மதுசூதனன் இன்று காலமானார் அவருக்கு வயது 80. மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
80 வயதான இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக 16 வயதில் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். எம்ஜிஆர் அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் அதிமுக தொண்டராக இருந்து அரசியலுக்கு வந்தவர்.