Entertainment
பட்டினபிரவேசத்தை உலகறிய செய்த கி.வீரமணிக்கு நன்றி- மதுரை ஆதினம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதினம் உள்ளது. மிக பழமையான ஆதின மடமாகிய இந்த ஆதினத்தில் வருடம் தோறும் நடக்கும் ஒரு விழா பட்டினப்பிரவேசம்.
சீடர்கள் தங்கள் குருமார்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழா மூடத்தனமானதுஎன சில திராவிட அமைப்புகளின் பின்புல வற்புறுத்தலால் முதல்வர் இந்த விழாவுக்கு தடை விதித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த விழாவுக்கு தடை விதித்ததால், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.கடுமையான எதிர்ப்புக்கு பின்னர் பட்டினபிரவேசம் நிகழ்ச்சி நடக்கும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிருபர்களை சந்தித்த மதுரை ஆதினம் கூறியதாவது, பட்டின பிரவேசம் என்றால் யாருக்கும் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சைக்குள்ளாக்கி இப்போது உலகமறியச் செய்த திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் மன்னார்குடி ஜீயர் அமைச்சர்கள் வெளியில் நடமாட முடியாது என தெரியாமல் சொல்லி விட்டார் .இனிமேல் அப்படி சொல்ல மாட்டார் என மதுரை ஆதினம் கருத்து கூறியுள்ளார்.