இதனால்தான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் – உண்மையை உடைத்த மதுமிதா

188
madhumitha
பிக்பாஸ் வீட்டில் பலருடன் மோதிக்கொண்டே இருந்த மதுமிதா திடீரெனெ நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Madhumitha revealing the secreat of biggboss  – கையை அறுத்துக்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றதால் அவர் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. அவர் கையில் இருந்த கட்டும் அதை நிரூபித்தது. அதன்பின், சம்பள பாக்கியை தரவில்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், விஜய் டிவி மீது மதுமிதாவும் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகம் பற்றி ஒருவரியில் நான் ஒரு கவிதை சொன்னேன். அதனை ஒளிபரப்ப முடியாது என பிக்பாஸ் தெரிவித்தார். இதைக்கேட்டு அங்கிருந்த 8 பேரும் என்னை கிண்டலடித்தனர். என்னை பார்த்து சிரித்தனர். அதனால் மனமுடைந்து நான் கையை அறுத்துக் கொண்டேன். அப்போதும் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தனர். சேரன் சாரும், கஸ்தூரியும் மட்டுமே எனக்கு ஆதரவாக இருந்தார்கள் என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதன் மூலம் மதுமிதா ஏன் தற்கொலைக்கு முயன்றார். ஏன் வெளியேற்றப்பட்டார் என்கிற உண்மை தெரியவந்துள்ளது.

பாருங்க:  பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கஸ்தூரி?...