முடியாத பஞ்சாயத்து… விஜய் தொலைக்காட்சி மீது மதுமிதா மீண்டும் புகார்…

முடியாத பஞ்சாயத்து… விஜய் தொலைக்காட்சி மீது மதுமிதா மீண்டும் புகார்…

விஜய் தொலைக்காட்சி மீது நடிகை மதுமிதா மீண்டும் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் பலருடன் மோதிக்கொண்டே இருந்த மதுமிதா திடீரெனெ நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கையை அறுத்துக்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றதால் அவர் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. அவர் கையில் இருந்த கட்டும் அதை நிரூபித்தது.

அதன்பின், சம்பள பாக்கியை தரவில்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள மதுமிதா ‘ ஹலோ ஆப் டாஸ்கின் போது என்னை சக போட்டியாளர்கள் கொடுமை படுத்தினர். தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்ததை வெளியே கூறக்கூடாது.. பத்திரிக்கையாளர்களை சந்திக்கக் கூடாது என விஜய் டிவி தரப்பில் மிரட்டுகிறார்கள். ஆனால், நான் கூறவில்லை எனில் மக்கள் என்னை தவறாக புரிந்து கொள்வார்கள். அதனால் புகார் அளித்தேன்’ என அவர் கூறியுள்ளார்.