cinema news
பத்திரிக்கையாளர் மாதேஷின் தவறான விமர்சனத்துக்கு தக்க பதிலடி கொடுத்த ருத்ரதாண்டவம் இயக்குனர்
பிரபலமான யூ டியூப் சேனல் ஒன்றின் பத்திரிக்கையாளர் மாதேஷ், இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தை தவறாக விமர்சிப்பவர்களுக்காக தேவையில்லாமல் வார்த்தையை விடுகிறேன் என ருத்ர தாண்டவம் படத்தையும், திரெளபதி படத்தையும் இழுத்து பேசி இருக்கிறார்.
அவர் கூறியது இதுதான்
படத்தை பார்க்காமல் எதுக்கு இப்படி விஜய் மேல இருக்குற வன்மத்தை கொட்டின்னு இருக்கீங்க படத்தை பார்த்துட்டு பேசுங்க. இது என்ன திரௌபதி.. ருத்ரதாண்டவம் படம் மாதிரி ஒரு பிரிவை தவறானவர்களாய் காட்டுற படமா இருக்காது அது எனக்கு நல்லா தெரியும் போங்க போய் படம் பாருங்க என கூறி இருக்கிறார்.
இதை பார்த்த திரெளபதி, ருத்ரதாண்டவம் படத்தின் இயக்குனர் மோகன், மாதேசுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
எந்த பிரிவை தப்பா காட்டி வன்மத்தை கொட்டுனோம் சார்.. தைரியமா என்னோட படத்துல வர்ற காட்சிய ஒப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட முடியுமா.. காழ்ப்புல பேசிட்டு சுத்தாதீங்க.. உண்மைய தவிர வேற எதையும் சொல்லல.. தாழ்வு மனப்பான்மைல இருந்து வெளிய வாங்க மாதேஷ் சார் என கூறியுள்ளார்.