Published
1 year agoon
இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன். திறமையான விஞ்ஞானியாக பணியாற்றிய இவரை கடந்த 1994ம் ஆண்டு தேசதுரோக வழக்கில் காங்கிரஸ் அரசு கைது செய்தது.
இதை எல்லாம் தவறு என நிரூபித்து அவர் வெளியேறி விட்டார். அவரின் வாழ்க்கை கதையை மாதவன் படமாக இயக்கி அவரே நடித்து வருகிறார்.
இந்த படத்தின் டிரெய்லர் எல்லாம் வெளியாகிவிட்டது. இருப்பினும் இந்த படம் எப்போது வெளிவரும் என தெரியவில்லை.
இந்நிலையில் விரைவில் இந்த படம் குறித்து அப்டேட் வரும் என மாதவன் சொல்லி இருக்கிறார்.
அதனால் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.