சூர்யாவின் சூரரை போற்று எப்படி- மாதவனின் விமர்சனம்

சூர்யாவின் சூரரை போற்று எப்படி- மாதவனின் விமர்சனம்

சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் 6மாதங்கள் முன்பே தமிழ்ப்புத்தாண்டுக்காக  ரிலீஸ் ஆக வேண்டிய படமாகும். கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்காத நிலையில் இப்படம் ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில் இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. பெரிய நடிகரின் படம் ஓடிடி தளத்தில் வெளியிட்டால் சரியாக வராது என திரைத்துறை, சினிமா தியேட்டர் அதிபர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதால் இப்படத்தை ஓடிடியில் வெளியிடும் முயற்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூரரை போற்று படம் இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் ஏற்கனவே மாதவன் இறுதிச்சுற்று படத்தில் நடித்திருப்பதால் இந்த சூரரை போற்று படத்தை அவர் பார்த்திருப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார் அதில் சூரரை போற்று படம் எப்படி உள்ளது என மாதவனிடம் கேட்டுள்ளார் அதற்கு மாதவன் மைண்ட் ப்ளோயிங் என தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.