cinema news
நடிகர் மாதவனின் பிறந்த நாள்
அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதவன். இவர் நடிக்க வந்த புதிதில் பெண் ரசிகைகள் அதிகம். மாதவன் மாதவன் என்று பல ரசிகைகள் உருகிய சாக்லேட் பாயாக இவர் இருந்தார்.
தொடர்ந்து மின்னலே படம் வந்து அதில் வந்த பாடல்கள் எல்லாம் மிக பிரபலமானவுடன் ரசிகர் ரசிகைகளின் எண்ணிக்கை அதிகமாக ஆனது.
பிறகு வந்த ரன் படம் மூலம் அதிரடி ஆக்சன் ஹீரோவாக இவர் உருவெடுத்தார்.
தற்போது விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று கதையில் தன்னை நம்பி நாராயணன் ஆகவே தன்னை மாற்றிக்கொண்டு நடித்து முடித்துள்ளார்.
இன்று நடிகர் மாதவனுக்கு பிறந்த நாள் . மாதவனுக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.