Connect with us

தமிழகத்தில் எஞ்சியுள்ள மாவட்டங்களிலும் அரசு மருத்துவகல்லூரி- அமைச்சர் தகவல்

Tamil Flash News

தமிழகத்தில் எஞ்சியுள்ள மாவட்டங்களிலும் அரசு மருத்துவகல்லூரி- அமைச்சர் தகவல்

தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டும்தான் மருத்துவக்கல்லூரி இருந்து வரும் நிலையில் தற்போது 11 மருத்துவக்கல்லூரிகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.

இந்த 11 மருத்துவக்கல்லூரிகளும் விரைவில் திறந்து வைக்கப்பட இருந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற எம்.எல்.ஏவின் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடங்குவது மாநில அரசின் கொள்கை முடிவு்.

ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் ஏற்கனவே, 11 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில் 2021-22ம் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரி இல்லாத மயிலாடுதுறை மாவட்டம் உள்பட எஞ்சிய மாவட்டங்களில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

பாருங்க:  போதையில் தண்டவாளத்தில் தூக்கம்- ரயில் சென்றும் உயிர் தப்பிய மனிதர்

More in Tamil Flash News

To Top