Tamil Flash News
புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.. இல்லையேல் போராட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் தமிழில் கேட்கப்படும் கேள்விகள் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்மொழிக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த க்ரூப் 2, 2A பதவிகளுக்கான புதிய பாடத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், “இன்டர்வியூ உள்ள க்ரூப் டூ பதவிகள்” மற்றும் “இன்டர்வியூ இல்லாத க்ரூப் 2, 2A பதவிகள்” ஆகியவற்றிற்கு தமிழ்மொழித் தேர்வினை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்மொழியையும், தமிழக இளைஞர்களையும் புறக்கணிக்கும் இந்தப் பாடத் திட்டத்தை உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திரும்பப் பெறாவிடில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களைத் திரட்டி- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பும், மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
என அவர் எச்சரித்துள்ளார்.
