சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்.. ரூ. 5 லட்சம் நிதியுதவி…

265

பேனர் விழுந்த மரணமடைந்த சுபஸ்ரீயின் பெற்றோரை திமுக தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

stalin2

இந்நிலையில், இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுபஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன்பின், அவர்களுக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அவருடன் டி.ஆர். பாலு, எம்.பி. தாமோ அன்பரசன் உடனிருந்தனர்.

பாருங்க:  சங்கீத வித்வான் பாடுவது போல் பன்னீரின் பட்ஜெட் உரை - கலாய்த்த ஸ்டாலின்
Previous articleநாளை முதல் லாரி ஸ்டிரைக் துவக்கம் – 45 லட்சம் லாரிகள் ஓடாது
Next articleஆர்.கே.சுரேஷை மீண்டும் இயக்கும் பாலா – அதிரடி அறிவிப்பு