பங்காரு அடிகளார் இல்ல திருமணம் – ரகசியமாக கலந்து கொண்ட ஸ்டாலின்

519

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகனின் மகள் மதுமலருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் க.பிரசன்ன வெங்கடேஷுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. அதேபோல் நேற்று மாலை மேல்மருவத்தூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது திடீரென திமுக தலைவர் ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொண்டார். அவருடன் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டனர். ஸ்டாலின் அந்நிகழ்ச்சிக்கு வருவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு பின்னரும் திமுக தரப்பில் எந்த புகைப்படமும் வெளியிடப்படவில்லை.
ஆனால், பங்காரு அடிகளார் தரப்பில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பாருங்க:  கோட் சூட்.. பியானோ.. பேஸ்கெட் பால் - வைரலாகும் செங்கோட்டையன் புகைப்படங்கள்
Previous articleஒத்த செருப்பை போட்டோ எடுங்கள் – பார்த்திபனோடு டின்னர் சாப்பிடுங்கள்
Next articleவனிதாவுக்கு டப்பிங் பேசிய சாண்டி – பிக்பாஸ் கலக்கல் வீடியோ