நுரையீரல் மற்றும் சுவாசக் நோய்கள் நிரந்தரமாக தீர நாம் செய்ய வேண்டிய இறை வழிபாடு
தஞ்சாவூர் அருகில் சூலமங்கலம் என்ற ஒரு ஊர் உள்ளது
இங்கே அருள்மிகு கீர்த்தி வாசீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது.
இவருக்கு மற்றும் இங்கிருந்து அருள் புரியும் அன்னைக்கும் நவ மூலிகை எண்ணையால் காப்பு இடவேண்டும்.
சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை வீதம் குறைந்தது 18 செவ்வாய்க்கிழமைகள் இவ்வாறு செய்து வருவதன் மூலமாக காசநோய் பிசி மூச்சிரைப்பு மற்றும் நுரையீரல் சார்ந்த நோய்கள் படிப்படியாக தீர்ந்து விடும்.
இந்த நவ மூலிகை எண்ணெய்யில்
இலுப்பை எண்ணெய்
கரிசலாங்கண்ணி தைலம்
நெல்லி தைலம்
பொன்னாங்கண்ணி தைலம்
விளக்கெண்ணெய்
வேப்பெண்ணெய்
நல்லெண்ணெய்
தேங்காய் எண்ணெய்
பசு நெய்
போன்றவைகளை சரி விகித அளவில் கலந்து கொள்ள வேண்டும். (அனைத்திலும் கலப்படம் இல்லாமல் இருக்கும் எண்ணெய்களை தேர்வு செய்வது உங்கள் பொறுப்பு.)
சாம்பிராணி தூபத்தில் சந்தனத்தூள், கஸ்தூரி, ஜவ்வாது போன்றவைகளை கலந்து கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு செவ்வாய்க்கிழமை செய்ய இயலாதவர்கள் மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை இவ்வாறு செய்து வரலாம்.