உங்களுக்கு லவ் பண்ண வேற இடம் கிடைக்கலயா? – வைரல் புகைப்படம்

173

சரக்கு ரயிலின் அடியில் அமர்ந்து காதல் ஜோடி ஹாயாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களில் காதலர்கள் அமர்ந்து பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் அடியில் அமர்ந்து ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை சமீபத்தில் இந்தியன் ரயில்வே அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘ இது ஆபத்தானது மட்டுமல்ல. குற்றமும் கூட. சரக்கு ரயில் எப்போது வேண்டுமானாலும் முன் எச்சரிக்கை செய்யப்படாமல் புறப்படும். இது போன்ற காரியங்களில் ஈடுபடாதீர்கள்’ என டிவிட் செய்துள்ளது.

 

பாருங்க:  ஐம்பது லட்சத்திற்கும் மேலானோர் பதிவிறக்கம் - ”ஆரோக்கிய சேது” செயலி