Connect with us

Entertainment

லவ் ஜிகாத்- சுரேஷ் கோபி கூறுவது என்ன

கேரளாவில் உள்ள முஸ்லீம் ஆண்கள் மற்ற மதத்தை சேர்ந்த பெண்களை காதலித்து அவர்களை தங்கள் மதத்துக்கு மாற்றி லவ் ஜிகாத் செய்வதாக தொடர் புகார்கள் நீண்ட நாட்களாக எழுந்து வந்தது.

கேரளாவில் அதிக அளவில் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. இதை ‘லவ் ஜிகாத்’ என்கின்றனர். இதேபோல, இளைஞர்கள், இளம்பெண்களை போதை மருந்துகளுக்கு அடிமையாக்கியும் மதமாற்றம் செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த பிஷப் மார் ஜோசப் கல்லரங்காட், ‘‘கத்தோலிக்க இளைஞர்களையும் இளம்பெண்களையும் திட்டமிட்டு ‘லவ் ஜிகாத்’ ‘போதை ஜிகாத்’ மூலம் வீழ்த்துகின்றனர்’’ என்று தெரிவித்தார். இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பிஷப் கல்லரங்காட்டை பாஜக மாநிலங்களவை எம்.பி.யுமான சுரேஷ் கோபி சந்தித்துப் பேசி அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

சுரேஷ் கோபி நேற்று கூறுகையில், ‘‘ பிஷப் கூறும் குற்றச்சாட்டு குறித்து மாநில அரசு ஆராய வேண்டும்.  இது தொடர்பாக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் என்ன சொல்கிறார் என்பதை அறிய அவர்களை மத்திய அரசு அழைத்துப் பேச வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

பாருங்க:  மான் வேட்டை வழக்கு சல்மான் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

Entertainment

பேரன்களுடன் அண்ணாத்த படம் பார்த்த ரஜினி

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது. தீபாவளி திருநாளில் வெளியாகும் இப்படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு (27.10.2021) அண்ணாத்த படத்தை பார்த்துள்ளார். படம் முடிந்த பிறகு ரஜினியின் பேரன் கட்டிப்பிடித்ததை நெகிழ்ச்சியாக ரஜினிகாந்த் Hoote சமூக வலைதளம் மூலம் குரல் பதிவாக பகிர்ந்துள்ளார். முழு குரல் பதிவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  மான் வேட்டை வழக்கு சல்மான் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
Continue Reading

Entertainment

பாலா பற்றி திடீரென வாய் மலர்ந்த சூர்யா

நடிகர் சூர்யா நடிகர் சிவக்குமாரின் வாரிசு என்றாலும் ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. சூர்யாவும் என்னென்னவோ நடித்து பார்த்தார். விக்ரம் பட்ட கஷ்டம் போல சூர்யாவும் படாத கஷ்டமில்லை இருந்தாலும் சினிமாவில் முன்னேற்றமில்லாமல் இருந்தார்.

இயக்குனர் பாலா சேது முடித்து அந்த வெற்றிக்களிப்பில் இருந்த கையோடு அடுத்த படமாக நந்தாவை துவக்கினார். இதில் சூர்யாவுக்கு சிறப்பான வேடம் கொடுத்தார்.

இந்த படத்தின் மூலம் சூர்யாவின் சினிமா வாழ்க்கை மாறியது. அடுத்த மாதம் 14ம் தேதியுடன் சினிமாவின் தன் வெற்றியை சூர்யா துவக்கி 20 வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில் என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என சூர்யா கூறியுள்ளார்.

பாருங்க:  மான் வேட்டை வழக்கு சல்மான் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
Continue Reading

Entertainment

புஷ்பா படத்தின் சாமி சாமி லிரிக்கல் வீடியோ

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புஷ்பா படத்தின் சாமி சாமி என்ற லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  விஜய் சேதுபதி நடிக்கும் 19 பட பர்ஸ்ட் லுக்
Continue Reading

Trending