லவ் ஜிகாத்
செய்ய இது ஒன்றும் உத்தரப்பிரதேசம் இல்லை – மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் சிறுமி பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சலசலப்புக்கு மத்தியில், முதல்வர் மம்தா பானர்ஜி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா அல்லது காதலித்தால் கர்ப்பமாக இருந்தாரா என கேள்வி எழுப்பினார்.
அவள் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்பதை எப்படி அறிவது? மரணத்திற்கான காரணத்தை போலீசார் இன்னும் கண்டறியப்படாத நிலையில், மம்தா பானர்ஜி இவ்வாறு பேசினார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருந்தாளா அல்லது காதல் விவகாரத்தில் இருந்தாளா அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாளா? என்பது குடும்பத்தினருக்குத் தான் தெரியும் என்றார்.
ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து கொண்டிருந்தால், நான் அவர்களை எவ்வாறு தடுப்பது? ”என்று ‘பிஸ்வா பங்களா மேளா பிரங்கன்’ திறப்பு விழாவில் முதல்வர் உரையாற்றினார்.
லவ் ஜிஹாத் என்ற பெயரில் நான் அதைச் செய்ய இது ஒன்றும் உத்தரபிரதேசம் அல்ல,” என்று அவர் சாடினார். இதுகுறித்து மாநில குழந்தைகள் ஆணையம் விசாரிக்கும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
மத்திய அரசை தாக்கி பேசிய முதல்வர், “டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அசாம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மக்கள் படுகொலைகள் தொடர்பாக எத்தனை சிபிஐ விசாரணை நடத்தப்பட்டுள்ளது? எத்தனை தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்? சிபிஐ, பயன்படுத்தி எத்தனை சதி செய்தாலும் பரவாயில்லை. நாங்கள் பலவீனமானவர்கள் என்று நினைக்காதீர்கள் என்றார்.