தந்தையால் கண்டிக்கப்பட்டு காதலை கைவிடும் மன நிலையில் இருக்கும் லாஸ்லியாவின் சோக புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் தந்தை லாஸ்லியாவின் காதலை கண்டிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
நான் இப்படியா உன்னை வளர்த்தேன்.. எல்லோரும் என்னை காறி துப்புகிறார்கள்.. எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு உள்ளே வா என அவர் வீட்டினுள் அழைக்கும் காட்சிகள் புரமோவில் காட்டப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் கவினிடம் லாஸ்லியா நெருக்கம் காட்டமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் எப்போதும் கவினுடன் அமர்ந்திருக்கும் லாஸ்லியா, தனியாக, சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள்
ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே..
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே… என கிண்டலடித்து வருகின்றனர்.