Entertainment
தேவாவுடன் பாடல் பாடிய லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் கவனம் ஈர்த்தவர் லாஸ்லியா. இலங்கையை பூர்விகமாக கொண்ட லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடன் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் அதில் ஒன்றுதான் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் நடிக்கும் பிரண்ஷிப்.
ஹர்பஜன் சிங் தமிழில் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் கவனம் ஈர்த்த லாஸ்லியா ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகை லாஸ்லியா இப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். இன்று ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளையொட்டி முதல் பாடலாக வெளிவந்துள்ள ‘அடிச்சு பறக்கவிடுமா’ பாடலை இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பாடியிருக்கிறார் லாஸ்லியா.
