என்னை காறி துப்புகிறார்கள்… லாஸ்லியாவுக்கு டோஸ் விட்ட தந்தை – புரமோ வீடியோ

306
losliya father
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கும் லாஸ்லியாவின் தந்தை அவரின் காதலை கண்டித்த வீடியோ வெளியாகியுள்ளது.

Losliya father fired her for her affection with kavin – பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டி விறுவிறுவென சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஃபிரீஸ் டாக் நடந்து வருகிறது. அதன்படி போட்டியாளர்களின் உறவினர்கள் திடீரென உள்ளே வந்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். சமீபத்தில் முகேனின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் வந்து முகேனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

அதேபோல், லாஸ்லியாவின் தந்தை தற்போது வீட்டிற்கு வந்துள்ளார். ஆனந்த யாழை மீட்டுகிறாள்.. என்கிற பாடல் ஒலிக்க புரிந்து கொண்ட லாஸ்லியா கதறி அழுத காட்சிகள் காலை வெளியிடப்பட்டது. மேலும், தன் மகளின் காதலையும் அவர் கண்டிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

நான் இப்படியா உன்னை வளர்த்தேன்.. எல்லோரும் என்னை காறி துப்புகிறார்கள்.. எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு உள்ளே வா என அவர் வீட்டினுள் அழைக்கும் காட்சிகள் புரமோவில் காட்டப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் கவினிடம் லாஸ்லியா நெருக்கம் காட்டமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  கதறி அழும் லாஸ்லியா .. அவரை பார்க்க யார் வந்தா தெரியுமா? (வீடியோ)