biggboss

பிக்பாஸில் திடீர் திருப்பம்.. 2 பேரை வெளியேற்றிய கமல்… (வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 பேர் எலுமினேஷன் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. பினாலே டாஸ்க் மூலம் நேரடியாக ஒரு போட்டியாளர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே அதை நோக்கி எல்லோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் நாமினேஷனில் சேரன், லாஸ்லியா, ஷெரின், கவின் ஆகியோர் உள்ளனர். இதில் ரசிகர்களிடம் குறைவான வாக்குகளை பெற்ற ஷெரின் வெளியேற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால், இன்று போட்டியாளர்களிடம் பேசும் கமல்ஹாசன் லாஸ்லியா மற்றும் சேரன் இருவரையும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வருமாறு கூறும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.