லோகேஷிடம் கேள்வி கேட்க வேண்டுமா?

லோகேஷிடம் கேள்வி கேட்க வேண்டுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் விக்ரம். இப்படம் திரையிட்ட இடத்தில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன்கள் ஆரம்பத்திலும் சரி இப்பொழுதும் சரி அதிக அளவில்தான் உள்ளன. கமலுக்கு தேர்தல் மற்றும் பல வருடமாக சினிமாக்களில் தொடர் தோல்வி இருந்து வந்தது இந்த நிலையில் இப்படம் வெற்றி பெற்று இருப்பதால் குஷியில் உள்ளார்.

அதேபோல் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் ரொம்ப குஷியில் உள்ளார். ஏனென்றால் கமலஹாசனை இயக்கியது இன்று வரை அவருக்கு ஒரு ஆச்சரியமாகவே உள்ளதாம். மேலும் கமலிடம் இருந்து கார் பரிசு பெற்றதால் இன்னும் ஆச்சரியத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் லோகேஷிடம் நீங்கள் ஏதாவது கேள்வி கேட்க வேண்டும் என்றால் கேள்வியை டுவிட்டரில் டைப் செய்து, #AskDirLokesh என்ற ஹேஷ்டோக்கோடு அப்லோட் செய்தால் உங்களது கேள்விக்கு லோகேஷ் பதில் தருவாராம்.