Entertainment
பெரிய நடிகர்கள் என்பதால்தான் அப்படி காட்சி வைக்க வேண்டியதாயிற்று
சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன திரைப்படம் மாஸ்டர். இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சொந்த ஊரில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பேசிய லோகேஷ் கனகராஜ் படம் எல்லா ஊர்களிலும் நன்றாக செல்வதாகவும் அனைத்து இடங்களிலும் இருந்து அளவுக்கதிகமான குறுந்தகவல்கள் பாஸிட்டிவ் ரிவ்யூ வந்திருப்பதாக குறிப்பிட்டார்.
படம் நல்ல அளவு வரவேற்பு பெற்றாலும் மிகவும் நீளமாக செல்கிறது என பலர் குறிப்பிட்டிருந்தனர். இதை சுட்டிக்காட்டிய லோகேஷ்,
பலரும் 3 மணி நேரப் படம் குறித்துப் பேசுகிறார்கள். இரண்டு பெரிய நாயகர்கள் என்னும் போது, இருவருக்குமே காட்சிகள் வேண்டும். அதில் நிதானம் வேண்டும் என்று தான் 3 மணி நேரம் காட்சிகள் வைத்தேன் என கூறியுள்ளார்.
