நீலகிரி மாவட்டம் மசினகுடியில் நான்கு மாதங்களுக்கு முன் தீ வைக்கப்பட்ட யானை காதில் ஏற்பட்ட தீக்காயத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் முன் இறந்தது. யானையை முதுமலை வனவிலங்கு சரணாலயம் கொண்டு சென்று சிகிச்சையளிக்க முடிவு செய்த வனத்துறையினர் யானையை கொண்டு செல்லும்போதே உயிரிழந்தது.
இந்த நிலையில் யானையை தீ வைத்து கொன்றவர்களை மிக தீவிரமாக வனத்துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று இது தொடர்பாக மசினகுடியில் உள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் இன்னொருவர் கைது செய்யப்பட்டனர்.
நிக்கிராயன் என்பவரை போலீஸ் தேடி வரும் நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் தங்கும் விடுதி சீல் வைக்கப்பட்டது.