Connect with us

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு அறிவிப்பு!

TN lockdown till APR30th

Corona (Covid-19)

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவருகின்றன. தமிழகத்தில் பிரதமரின் உத்தரவைக் கேட்டுச் செயல்படுத்தப்படும் என தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அவர் பேச்சில் ’ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம். கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதனால், விழித்திருங்கள் – விலகியிருங்கள் –வீட்டிலிருங்கள்’ ஆகியவற்றைப் பின்பற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

More in Corona (Covid-19)

To Top