தமிழ்நாட்டில் ஊரடங்கு 5.0 தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த புதிய அறிவிப்புகள்!

560
Tamilnadu Government new annou.
Tamilnadu Government new annou.

தமிழகத்தில் ஊரடங்கு 5.0 ஜுன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கில் மத்திய அமைச்சகத்தின் அறிவிப்பின்படி தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள் என்னென்ன? கட்டுப்பாடுகள் என்னென்ன? ஊரடங்கு 5.0 – தளர்வுகள் குறித்த முழு விவரங்கள்!

தளர்வுகள்:
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்.
ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி
வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.
50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி
ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்
வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ( நகை, ஜவுளி போன்றவை) 50 % பணியாளர்களுடன் செயல்படலாம்
இணைய வழி கல்வியை கல்வி நிறுவனங்கள் தொடரலாம்.

கட்டுப்பாடுகள்:
வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.
பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை.
ரிசார்ட்டுகள், விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது
மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும்
ஜூன் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

பாருங்க:  கோவிட்-19 மாத்திரை ஏற்றுமதிக்கு தடை - இந்தியாவின் அதிரடி அறிவிப்பு