Published
2 years agoon
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய உடன்பிறவா சகோதரி போல இருந்தவர் அவரது தோழி சசிகலா. இவர்தான் அதிமுகவில் எல்லாம் என்ற வகையில் ஜெ ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது இருந்தது.
ஜெவின் மரணத்திற்கு பிறகு எல்லாமே தலைகீழாக மாறி எடப்பாடி தலைமையிலானவர்கள் அதிமுக கட்சியை கைப்பற்றினர். மேலும் சொத்து குவிப்பு வழக்குக்காக 4 வருடம் பெங்களூரு ஜெயிலில் தண்டனையையும் அனுபவித்து விட்டு வந்திருக்கும் சசிகலா என்ன செய்ய இருக்கிறார் என்பதே அடுத்த கட்ட மூவ் ஆக இருந்த நிலையில் சிறையில் இருந்து வந்த சசிகலா தான் எதுவுமே செய்யல அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கிறேன் என சொன்னார் இதை நம்பிய ஊடகங்களும் அவரின் செய்தியை விட்டு ஒதுங்கி இருந்தது.
இந்நிலையில் தினம் தோறும் ஏதாவது தொண்டர்களுடன் பேசி வரும் சசிகலா விரைவில் தான் தமிழகம் முழுவதும் சென்று தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும் கொரோனா பிரச்சினைகள் சரியானவுடன் தமிழகம் முழுவதும் செல்ல இருப்பதாக திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏவும் தற்போது அதிமுகவில் இருக்கும் உமா தேவனிடம் தொலைபேசியில் பேசியுள்ளார் சசிகலா.