கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தினசரி 6000 பாதிப்புகளுக்கு மேல் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 2000க்கும் குறைவாகத்தான் பாதிப்பு வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது டெல்லியில் ஊரடங்கு கொண்டு வர அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் முயற்சிப்பதாக செய்திகள் வெளியானது. கொரோனா பரவி வருவதாக சில மார்க்கெட்டுகளும் மூடப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது.
இதே போல் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருவதாகவும் இதனால் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் இரவு ஒன்பது மணி முதல் காலை 6 மணி வரையான இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் 5 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.