Corona (Covid-19)
உள்ளூர் விமானம் முலம் கர்நாடகம் போறீங்களா?? அப்போ 7 நாள்கள் தனிமை கட்டாயம்!
உள்ளூர் விமானம் முலம் கர்நாடகம், பெங்களூர் போனால் 7 நாள்கள் தனிமை கட்டாயம்!
இந்தியாவில் 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் படிபடியாக தொடரப்பட்டுள்ளது. அரசு பணியாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும், வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து, என படிப்படியாக தளர்வுகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஜுன் 1 முதல் 100 ஜோடி ரயில்கள் இயக்கயுள்ளது. இதனை அடுத்து உள்நாட்டு விமான சேவை வரும் மே 25 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில், உள்ளூர் விமானம் முலம் கர்நாடகம், பெங்களூர் போனால் 7 நாள்கள் தனிமை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ”தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களிலிருந்து கர்நாடகாவிற்கு, உள்ளூர் விமானங்களில் வரும் பயணிகள் 7 நாட்கள் கொரோனா முகாம்களில் தனிமைமைப்படுத்தப்படுவார்கள்!” என கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தகவல் அளித்துள்ளார்.