Latest News
லோன் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம்- மாநகர காவல் ஆணையர்
தற்போது லோன் கொடுப்பதாக நிறைய ஆஃப்கள் உருவாகி உள்ளன. மக்களின் பணத்தேவையை புரிந்து கொண்டு கடன் கொடுப்பதாக கூறி அதிகமான அப்ளிகேசன்கள் வந்துள்ளன.
இவற்றில் லோன் கொடுப்பதற்கு என்னென்ன தேவை என நம் தனிப்பட்ட தகவல்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் லோன் கட்ட மிரட்டல் விடுக்கப்படுவதும் தொடர்கிறது.
இது போல் ஆப்களை நீக்க ப்ளே ஸ்டோருக்கு பரிந்துரை செய்து சில ஆஃப்கள் நீக்கப்பட்டாலும் மீண்டும் புற்றீசல் போல சில ஆப்கள் ப்ளே ஸ்டோருக்கு வந்துள்ளதால் எந்த லோன் ஆப் மூலமும் கடன் பெற வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
