லிவிங் டு கெதரில் 3 வருடம் இருந்து விட்டு ஏமாற்றி சென்ற பெண்- எரித்துக்கொன்ற காதலர்

லிவிங் டு கெதரில் 3 வருடம் இருந்து விட்டு ஏமாற்றி சென்ற பெண்- எரித்துக்கொன்ற காதலர்

தற்போது லிவிங் டு கெதர் என்ற திருமணம் ஆகாமலே சேர்ந்து இருக்கும் முறை பெரு நகரங்களில் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.

சென்னை செளகார்பேட்டையை சேர்ந்த துணிக்கடை நடத்தி வரும் 40 வயதான சந்தீப் ஜெயின் என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவருக்கும் இளைச்சி என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இளைச்சியும் திருமணமாகி கணவனை பிரிந்தவர் ஆவார்.

இந்நிலையில் சந்தீப் ஜெயினும் இளைச்சியும் ஒரே வீட்டில் 3 ஆண்டுகளாக லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் சந்தீப் ஜெயினை திருமணம் செய்யாமல் இன்னொரு தொழிலதிபரை காதலித்து அவரை மணக்க பெங்களூரு செல்ல இருந்தார் இளைச்சி. இதை தட்டிகேட்ட இளைச்சிக்கும் சந்தீப் ஜெயினுக்கும் இடையே வாக்குவாதமானது. கோபமடைந்த சந்தீப் ஜெயின் கையில் வைத்திருந்த மண்ணெண்ணேயை ஊற்றி இளைச்சியை எரித்துக்கொன்றார்.

சந்தீப் ஜெயினும் தீக்குளிக்க முயன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.