அதிமுக கூட்டணியில் பாஜகவோடு சேர்த்து மொத்தம் 8 கட்சிகள் கூட்டணியில் இணைவது தெரியவந்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் நாடு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. மேலும், அந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தை, மதிமுக, இந்திய கம்யுனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் அதிமுக – பாஜக கூட்டணியும் உறுதியாகியுள்ளது. இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் கட்சி, ஏ.சி.சண்முகம் கட்சி, தனியரசு கட்சி ஆகிய கட்சிகளும் இணைவது தெரியவந்துள்ளது. எனவே, அதிமுகவோடு சேர்த்து மொத்தம் 9 கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.