தமிழகத்தில், அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் சுட்டெரித்துள்ளது. அதனுடன் சென்ற வாரம் முதல் அனல்காற்றும் வீசத்தொடங்கியுள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகபட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 11 மணிக்கு மேல் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், 100 டிகிரி வரை சதம் அடித்துள்ளது வெயில்! தமிழகத்தில் டாப் 9 இடங்கள் எவை? எவை? தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டியது. திருத்தணி – 109.4; வேலூர் – 107.6; திருச்சி – 106.7; மதுரை விமான நிலையம் – 106.16; கரூர் பரமத்தி – 105.08; சேலம் – 102.9; நாமக்கல் – 102.2; மீனம்பாக்கம் – 101.8; பாளையங்கோட்டை – 101.3; தருமபுரி – 100.4.