Connect with us

Latest News

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் மரணம்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி சக்கரபாணி.இவரின் மகள் லீலாவதி இவர் தனது சித்தப்பா எம்.ஜி.ஆருக்கு கிட்னி பாதிக்கப்பட்டபோது தனது கிட்னியை கொடுத்து உதவினார்.  கேரளாவில் இருந்த லீலாவதி செய்திகளை நாளிதல்கள் மூலம் தெரிந்து எம்.ஜி.ஆருக்கு கிட்னி தானம் செய்து இருந்தார். இவருக்கு திருமணமாகி இருந்த நிலையிலும் கணவரின் ஒப்புதலுடன் கிட்னி தானம் செய்திருந்தார்.

தனக்கு கிட்னி தானம் செய்தவர் லீலாவதிதான் என எம்.ஜி.ஆருக்கு வலம்புரி ஜான் மூலம் தாமதமாக தான் தெரிந்ததாம் பின்பு அவரை அழைத்து கண்ணீர் மல்க நன்றி சொன்னாராம்.

இவ்வளவு பெரும் தியாகம் செய்த லீலாவதி , இன்று சென்னையில் அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார்.

பாருங்க:  அடுத்த வாரம் திருமணம்.. செல்போனால் பலியான இளம்பெண்

Entertainment

மோகன்லால் நடிக்கும் மரைக்காயர் படத்தின் தமிழ் டிரெய்லர்

மோகன்லால் நடிப்பில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமாக வெளிவர இருக்கும் படம் மரைக்காயர் அரபிக்கடல் சிங்கம். பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பாருங்க:  ஊரடங்கை மீறியதால் பைக்கை பிடுங்கிய போலீஸார்! தீக்குளித்த இளைஞர்!
Continue Reading

Entertainment

உதயநிதி படத்தில் வடிவேலு

பரியேறும் பெருமாள்,கர்ணன் படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் ஒரு படம் இயக்கி வருகிறார். உதயநிதி நடிக்க இருக்கும் இப்படத்தில் உதயநிதியுடன் வடிவேலுவும் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் தற்போது வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளை நடிகர் வடிவேலு சுமூகமாக தீர்த்துக் கொண்டார்  தற்போது புதிய படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  ஊரடங்கை மீறியதால் பைக்கை பிடுங்கிய போலீஸார்! தீக்குளித்த இளைஞர்!
Continue Reading

Latest News

ஐபிஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பு காவல் ஆணையராக ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளரான விஜயகுமார் மாற்றப்பட்டு அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பாருங்க:  தனுஷின் 43வது படம் அப்டேட்
Continue Reading

Trending