Published
10 months agoon
மாநகரம் படத்தின் வெற்றியால் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கைதி படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட லோகேஷ் கைதி படத்தை வித்தியாசமான முறையில் இயக்கி இருந்தார்.
கைதி படத்தில் வரும் சில காட்சிகளை இணைத்தே விக்ரம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் கைதி படம் பார்க்காமல் விக்ரம் படம் பார்க்க வருபவர்களுக்கு அது சரியான முறையில் புரிய போவதில்லை.
விக்ரம் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் அடுத்து இயக்கபோகும் படத்தில் சூர்யாவுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்படும் என தெரிகிறது.
இப்படி லோகேஷ் தனக்கு என்று ஒரு ஸ்டைல் வைத்து படம் உருவாக்கி வருவதால் இதற்கு lokesh cinematic universe என பெயரிடப்பட்டுள்ளது. இனி வரும் கைதி, விக்ரம் படங்களின் தொடர்ச்சியில் விக்ரம் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற பெயரை லோகேஷ் பயன்படுத்த இருக்கிறாராம்.